ரெண்டாங் அயாம்
தேவையான பொருட்கள்:
நடுத்தர அளவு துண்டுகளாக்கிய கோழி - 300 கிராம் கெட்டி தேங்காய் பால் - அரை கப் இரண்டாம் தேங்காய் பால் - ஒரு கப் அரைக்க: சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 10 பல் மிளகாய் வற்றல் - 8 - 10 (காரத்திற்கேற்ப) ஃப்ரெஷ் மஞ்சள் - ஒரு அங்குல அளவு இஞ்சி - ஒரு அங்குல அளவு ஃப்ரெஷ் காலங்கால் (ஃப்ரெஷ் சித்தரத்தை) - ஒரு அங்குல அளவு லெமன் கிராஸ் - ஒன்று எலுமிச்சை இலை - 3 மஞ்சள் இலை - ஒன்று (விருப்பப்பட்டால்) உப்பு - தேவையான அளவு சர்க்கரை - ஒரு தேக்கரண்டி வறுத்து பொடிக்க: தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி மல்லி விதை - கால் தேக்கரண்டி
செய்முறை:
மிளகாய் வற்றலை வெந்நீரில் ஊற வைக்கவும். லெமன் கிராஸின் வெளிப்புறத்தில் உள்ள இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி தடிமனான அடிப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து லேசாக தட்டி வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக வைக்கவும்.
வாணலியை சூடாக்கி தேங்காய் துருவல்
மல்லி விதை சேர்த்து சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் பொடித்து வைக்கவும்.
அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் மையாக அரைக்கவும். காலங்கால் கொஞ்சம் கடினமாக இருக்கும். சிறுதுண்டுகளாக வெட்டி சேர்த்து அரைக்கவும்.
அரைத்த கலவையை கோழித் துண்டுகளுடன் சேர்த்து கலந்து 20 நிமிடம் ஊற விடவும்.
ஊற வைத்த கோழியுடன் இரண்டாம் பால் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
நன்றாக கொதி வந்ததும் தட்டி வைத்திருக்கும் லெமன் கிராஸ்
லேசாக கையால் கசக்கிய எலுமிச்சை இலைகள்
மஞ்சள் இலை சேர்த்து மீண்டும் மூடி வேக விடவும்.
கோழித் துண்டுகள் முக்கால் பதம் வெந்ததும் பொடித்து வைத்துள்ள தேங்காய் பொடியை சேர்த்து கிளறவும்.
கோழி நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் முதல் பால் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேக விடவும்.
சுவையான இந்தோனேஷியன் ரெண்டாங் அயாம் தயார். சப்பாத்தி
சாதம் இரண்டிற்கும் நன்றாக இருக்கும்.