ரெட் பொடேட்டோ ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
ரெட் பொடேட்டோ - 2 மஞ்சள் பொடி - சிறிது மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கு தாளிக்க: கடுகு - சிறிது சீரகம் - அரை தேக்கரண்டி பூண்டு - 5 பல் கறிவேப்பிலை - 5 இதழ் வர மிளகாய் - 2 எண்ணெய் - தாளிக்க
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பொடேட்டோவை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய காயில் பொடி வகைகளை போட்டு குலுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பின் கலக்கி வைத்துள்ள ரெட் பொடேட்டோவை போட்டு வதக்கவும். நன்கு க்ரிஸ்பியாக வெந்ததும் இறக்கவும்.
சுவையான பொடேட்டோ ஃப்ரை தயார்.