ரவை பூ பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடி ரவை - 1 கிலோ

முட்டை - 1 கப்

சீனி - 1 கப்

எண்ணெய் - 1 கப்

ஜாம் - 500 கிராம்

தேங்காய் பூ - 250 கிராம்(உலர்ந்தது)

சோடா உப்பு - 1 தே.கரண்டி

செய்முறை:

முட்டை,சீனி,எண்ணெய் மூன்றையும் ஒன்றாக கலக்கவும்.

சோடா உப்பையும் சேர்க்கவும்.

அதில் ரவையை கொஞ்சம்,கொஞ்சமாக கொட்டி கலக்கவும்.

கையில் உருண்டை பிடிக்கும் பதம் வந்ததும் ரவை சேர்ப்பதை நிறுத்தவும்.

இதை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து 250° சூட்டில் oven- ல் வைக்கவும்.

5 நிமிடம் கழித்து பார்க்கவும்.

மேலே லேசாக வெடிப்பு வந்திருக்கும்.

ஜாமுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும்.

பணியாரத்தை oven- லிருந்து எடுத்து உடனே ஜாமில் போட்டு தேங்காய் பூவில் போட்டு பிரட்டி எடுக்கவும்.

குறிப்புகள்:

தேங்காய் பூ உலர்ந்தது பாக்கெட்டில் இருக்கும்.மாவை உருண்டை பிடித்து வைக்கும் போது கொஞ்சம் தள்ளி தள்ளி வைக்கவும்.பணியாரம் வெள்ளை நிறமாக இருக்கும் போதே oven- லிருந்து எடுத்து விடவும்.