ரண பீன்ஸ் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரண பீன்ஸ் - 250 கிராம் உருளைக்கிழங்கு - 150 கிராம் வெங்காயம் - 25 கிராம் மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி மிளகுதூள் - கால் தேக்கரண்டி கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி பால் - 100 மில்லி உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு நெட்டு பூண்டு - ஒன்று தண்ணீர் - 150 மில்லி எலுமிச்சை - 3 தேக்கரண்டி

செய்முறை:

பீன்ஸ் கறி செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

பீன்ஸ்

வெங்காயம்

பூண்டு

கிழங்கு ஆகியவற்றை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பீன்ஸ்

கிழங்கு

பூண்டு மற்றும் உப்பு போட்டு நன்கு பிரட்டி விடவும்.

தேவையானவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் அளவு தண்ணீரை இந்த காய் கலவையில் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.

காய் வெந்ததும் மஞ்சள் தூள்

மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி விடவும்.

அதன் பின்னர் பால்

கரம் மசாலா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டவும்.

நன்கு பிரட்டலாக ஆனதும்

இறக்கி வைத்து அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி விடவும்.

எளிமையான முறையில் செய்யக்கூடிய சுவையான ரண பீன்ஸ் கறி ரெடி. அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: