ரங்கோன் புட்டு
0
தேவையான பொருட்கள்:
ரவை - 2 கப் சீனி - 1 1/2 கப் தேங்காய் துருவல் - ஒரு கப் நெய் - 100 கிராம் முந்திரி டுட்டி-ப்ருட்டி ஏலக்காய்
செய்முறை:
ரவையை நன்கு வறுத்து தனியாக வைக்கவும். பிறகு வாணலியில் சிறுது நெய் விட்டு முந்திரி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்
பிறகு இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
வாணலியில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
பின் ரவை சேர்த்து கட்டி விழாமல் கிண்டவும்.
ரவை கெட்டியானதும் அதனுடன் வதக்கி வைத்துள்ள தேங்காய்
சீனி மற்றும் நெய் சேர்த்து கிண்டவும்.
இப்பொழுது ஏலக்காய் பொடி
டுட்டி-ப்ருட்டி சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறி பின் இறக்கவும்.
சுவையான ரங்கோன் புட்டு ரெடி.