யோக்கட்
தேவையான பொருட்கள்:
பால் - ஒரு லிட்டர்
சீனி - 130 கிராம்
ஜெலற்றீன் - ஒரு தேக்கரண்டி
யோக்கற் - ஒரு கப்
யோக்கற் கப் - 30 கப்
தேமோ மீற்றர் - ஒன்று
கொதிநீர் - 4 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையானளவு
ஓகண்டி துணி - தேவையானளவு
கலரிங் - 4 துளிகள் (விரும்பினால்)
எசன்ஸ் - 3 துளிகள் (விரும்பினால்)
இக்குபேற்றர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால், சீனி இரண்டையும் போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் ஜெலற்றீனை போட்டு அதன் மேல் 4 மேசைக்கரண்டி கொதி நீர் விட்டு கலந்து வைக்கவும்.
அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அந்த பெரிய பாத்திரத்தில் 2/3 பகுதிக்கு தண்ணீர் விட்டு பால் உள்ள பாத்திரத்தை அதனுள் வைத்து கொதிக்க வைக்கவும்.
அதன் பின்பு பாலின் வெப்பநிலையை தேமா மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 90°c க்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
அதன் பின்பு 30 நிமிடத்திற்கு அடுப்பிலே வைத்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.
பால் ஆற தொடங்கும் போது தேமோ மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 60°cக்கு வந்தபின்பு ஜெலற்றீன் கலவையை விட்டு நன்றாக கரைத்து ஓகண்டி துணியை வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
அதன் பின்பு பாலின் வெப்பநிலை 40°c அடையும் போது யோக்கற் ஒரு கப் இட்டு கரண்டியால் நன்றாக கலக்கவும்.
பின்பு கலறிங், எசன்ஸ் கலந்து யோக்கற் கப்பில் ஊற்றி 40°c வெப்பநிலையில் 5 மணித்தியாலம் இக்குபேற்றரில் வைக்கவும்.
யோக்கற் இறுகியதும் இக்குபேற்றரிலிருந்து வெளியே எடுத்து அறை வெப்பநிலையில் 10 நிமிடம் வைக்கவும்.
பின்பு எடுத்து 24 மணித்தியாலம் குளிரூட்டியில் வைக்கவும். பின்பு எடுத்து அறை வெப்பநிலையில் 2 மாத காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்.
குறிப்புகள்:
யோக்கட் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்ததும் பாலில் காணப்படும் சகல சத்துகளும் நிறைந்ததுமான ஒர் குளிர் உணவு. மாற்று முறை - இக்குபேற்றர் இல்லாதவிடத்தில் பெரிய ரெஜிபோம் பெட்டியை எடுத்து அலுமினிய தாளை அதன் உட்புறம் எல்லா பக்கங்கலிலும் விரித்து அதனுள் கொள்ளக்கூடிய அளவிற்கு யோக்கற் கப்பை பரவலாக அடுக்கி அதன்
பின்பு அதன் மேலாக 3 வரிசைகளுக்கு யோக்கற் கப்புகளை அடுக்கிப் பெட்டியின் மூலையில் 1 பல்ப்பை பொருத்தி 2" இடைவெளி விட்டு மூடி 42°c வெப்பநிலையில் 12 மணித்தியாலத்திற்கு வைத்து எடுத்து முன்னைய முறையில்
குளிசாதனபெட்டியில் வைத்தெடுக்கவும். எச்சரிக்கை - அஸ்மா, அலர்ஜிநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விசயங்கள் - பாலின் வெப்ப நிலையை தேமா மீற்றரினால் அளக்கவும்,பாலின் வெப்பநிலை 90°c க்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்,ஆற தொடங்கி 60°cக்கு பின்பு ஜெலற்றீன் கலவையை விடவும், 40°c அடையும் போது யோக்கற் இட்டு கரண்டியால் நன்றாக கலக்கவும், 40°c வெப்பநிலையில் 5 மணித்தியாலம் இக்குபேற்றரில் வைக்கவும்.