மைசூர் பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - ஒரு கப் அரிசி மாவு - 1 1/2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கின வெங்காயம் - அரை கப் பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) சீரகத்தூள் - அரை தேக்கரண்டி இஞ்சி துருவல் - கால் தேக்கரண்டி சமையல் சோடா - கால் தேக்கரண்டி தேங்காய் பல் - 2 தேக்கரண்டி புளித்த தயிர் - தேவையான அளவு பொடியாக நறுக்கின கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

மைசூர் பஜ்ஜி செய்ய தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி மைதாமாவு

அரிசி மாவு

சோடா உப்பு

தேங்காய்பல்

இஞ்சி துருவல் சேர்க்கவும்.

அதனுடன் நறுக்கின வெங்காயம்

பச்சை மிளகாய்

சீரகத்தூள்

கொத்தமல்லித்தழை

உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

தேவையெனில் மேலும் தயிர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். பஜ்ஜி இருப்பக்கமும் வெந்து சிவந்து வந்ததும் எடுக்கவும்.

சுவையான மைசூர் பஜ்ஜி தயார்.

குறிப்புகள்: