மைக்ரோவேவ் ஸ்டஃப்டு கத்தரிக்காய்
தேவையான பொருட்கள்:
பிஞ்சு கத்தரிக்காய் - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - கால் கப்
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
நெல்லிக்காய் பவுடர் (ஆம்லா பவுடர்) - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
வெங்காயம் (பெரிது) - ஒன்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காம்பை வெட்டாமல் அடிப்புறத்தில் லேசாக நான்காக பிளந்து எண்ணெயில் பிரட்டி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடி மைக்ரோவேவ் அவனில் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
5 நிமிடங்களின் பின்பு அதை இறக்கி வெங்காயம், உப்பு, நெல்லிக்காய்பவுடர்(ஆம்லாபவுடர்), மிளகுத்தூள், கரம் மசாலா அகியவற்றை கலந்து கத்தரிக்காய்க்குள் ஸ்டஃப்டு செய்யவும்.
ஸ்ட்ஃப்டு செய்யப்பட்ட கத்தரிக்காய்களை மைக்ரோ அவனில் மீடியம் ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். பின்பு 2 நிமிடங்கள் விடவும்.
அதன் பின்பு மைக்ரோவேவ் கத்தரிக்காய் ஸ்டஃப்டு தயாராகி விடும். இதனை சாதத்திற்கு அல்லது சப்பாத்திக்கு சேர்த்து உண்ணலாம்.
குறிப்புகள்:
மைக்ரோவேவ் ஸ்டஃப் கத்தரிக்காயில் உயிர்சத்துகள், மினரல்,கால்சியம், பாஸ்பரஸ்,பொட்டாசியம் நிறைந்து காணப்படும் அத்துடன் சுவையானது. எச்சரிக்கை - கத்தரிக்காய் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.