மைக்ரோவேவ் சேமியா கேசரி
0
தேவையான பொருட்கள்:
சேமியா - 100 கிராம்
சீனி - 50 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
ஆரஞ்சு சிகப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - ஒரு கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சேமியாவும் தண்ணீரும் சேர்த்து மூடி மைக்ரோவேவ் அவனில் வைத்து 5 நிமிடங்கள் ஹையில் குக் செய்யவும்.
பின்பு பாத்திரத்தை திறந்து சீனி, ஆரஞ்சு சிகப்பு நிறம், உப்பு சேர்த்து மூடி அவனில் வைத்து 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.
பிறகு 2 நிமிடங்கள் திறந்து வைக்கவும்.பின்பு 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். அதன் பின்பு அதை இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சுவையான மைக்ரோவேவ் சேமியா கேசரியை எல்லோரும் விரும்பி உண்ணுவார்கள். எச்சரிக்கை - இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.