மைக்ரோவேவ் சிக்கன் கிரேவி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி (துண்டுகள்) - 250 கிராம்

வெங்காயம் (அரைத்த விழுது) - 2

தக்காளி (அரைத்த விழுது) - ஒன்று

மிளகுத்தூள் - தேவையான அளவு

மல்லி(தனியா)தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

பால் - (1 - 2) கப்

தயிர் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

இஞ்சி (அரைத்த விழுது) - கால் மேசைக்கரண்டி

உள்ளி(பூண்டு) (அரைத்த விழுது) - கால் மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோழி(துண்டுகள்), உப்பு, மஞ்சள் தூள், இஞ்சிவிழுது, உள்ளி(பூண்டு)விழுது ஆகியவற்றை கலந்து தயிர் சேர்த்து இறுக்கமான மூடி போட்டு மூடி மைக்ரோவேவ் அவனில் 5 நிமிடங்கள் ஹையில் அவிக்கவும்.

பிறகு அந்த பாத்திரத்தை திறந்து மிளகுத்தூள், மல்லித்தூள்(தனியாத்தூள்), தக்காளி(அரைத்தவிழுது), வெங்காயம்(அரைத்தவிழுது), பால் சேர்த்து மூடி 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.

பிறகு மைக்ரோவேவ் அவனில் இருந்து வெளியில் எடுத்து மூடியை திறந்து விட்டு திருப்பி மைக்ரோவேவ் அவனில் 3 நிமிடங்கள் மீடியம் ஹையில் வைக்கவும்.

பிறகு மைக்ரோவேவ் அவனை நிறுத்தி விட்டு பாத்திரத்தை 2 நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் அப்படியே வைக்கவும்.

பின்பு சுவையான மைக்ரோவேவ் சிக்கன் கிரேவி தயாராகி விடும்.

குறிப்புகள்:

மைக்ரோவேவ் சிக்கன் கிரேவி மிகவும் சுவையானதும், சத்துக்கள் நிறைந்ததும் எல்லோரும் விரும்பக்கூடியதும், செய்வதற்கு இலகுவானதும் ஆகும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - கோழிதுண்டுகள் அவிந்துவிட்டதா என கவனிக்கவும்.