மைக்ரோவேவ் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா - அரை கப் பால் - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் கோகோ பவுடர் - 3 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி வெஜிடபுள் எண்ணெய் - 3 தேக்கரண்டி லெமன் சாறு - ஒரு தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
பின் பாலையும் சர்க்கரையும் நன்கு கலந்துக் கொள்ளவும். சர்க்கரை கரைய வேண்டும்.
அதில் மைதா
பேக்கிங் பவுடர்
பேக்கிங் சோடா மூன்றையும் சேர்க்கவும்.
பின் கோகோ பவுடரை கலந்து நன்கு ஒன்று சேர கலக்கவும்.
கலந்த பின் எண்ணெய்
லெமன் சாறு மற்றும் வெனிலா எசன்ஸை சேர்த்து கலந்து அதை பேக்கிங் செய்ய ஏற்ற பாத்திரத்தில் ஊற்றவும்.
மைக்ரோவேவ் அவனில் வைத்து ஐந்து நிமிடம் சூடு செய்யவும். கேக் பொங்கி மேலே வரும். அவரவரது அவனுக்கு ஏற்றப்படி நிமிடங்களை மாற்றிக் கொள்ளவும்.
5 நிமிடத்தில் நன்கு மிருதுவான கேக் தயார்.
மேலே விப் கிரீம் வைத்து பரிமாறலாம். எளிதில் செய்யக் கூடியது .