மேஷ்டு பொட்டேடோ (Mashed potato)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

• உருளை கிழங்கு – ½ கிலோ

• பட்டர் மில்க் (மோர்) – ½ கப்

• வெண்ணெய் (பட்டர்) – 2 மேஜை கரண்டி

• பொடித்த மிளகு - ¼ தே.கரண்டி (விரும்பினால்)

• உப்பு – 2 தே.கரண்டி

செய்முறை:

முதலில் உருளைகிழங்கினை தண்ணீரில் போட்டு நன்றாக வேக வைத்து கொள்ளவும்.

பிறகு உருளைகிழங்கினை தோல் உரித்து கொள்ளவும்.

அதன் பிறகு உரித்து வைத்துள்ள உருளைகிழங்குடன் பட்டர் மில்க், பட்டர், பொடித்த மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மத்து வைத்து மசிக்கவும்.

இப்பொழுது சுவையான மஸ்டு பொட்டேடோ ரெடி.

இதனை குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்புகள்: