மேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொட்டேடோ

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மேக்ரோனி - ஒரு கப்

மோசறேல்லா சீஸ் - அரை கப்

மைதா - ஒரு டீஸ்பூன்

பால் - ஒரு கப்

சீரகப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள் - மூன்று மேசைக்கரண்டி

வெங்காயம் - கால் கப்

தக்காளி - கால் கப்

பூண்டு - 9 பல்

பட்டை - ஒன்று

ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி

பட்டர் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

மேக்ரோனியை நான்கு கப் நீரில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு ஆறு நிமிடம் வேக வைத்து எடுத்து வடிகட்டிக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தோல் சீவி பாயில் பண்ணி எடுத்துக் கொள்ளவும்.

நன்கு வெந்ததும் ஒரு முழு உருளையை சரியாக நடுவில் வெட்டி வைக்கவும்.

ஆலிவ் ஆயில் மற்றும் பட்டரை கடாயில் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் லேசாக வதங்கியதும் பட்டையை பொரித்து கலவையில் இருந்து பட்டையை தனியாக எடுத்து விடவும்.

தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி சீஸ் சேர்த்து லேசாக உருகும் வரை கிளறவும்.

சீஸ் உருக ஆரம்பித்ததும் மிளகுத்தூள் சேர்த்து பால் சேர்த்து கொதிக்க விடவும்.

பால் நன்கு கொதித்து பாதி ஆனதும் மைதா மாவை போட்டு கட்டி ஆகாமல் நீர் தெளித்து இரண்டு நொடி கிளறவும்.

மேக்ரோனி சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கை போட்டு இரண்டு நிமிடத்தில் இறக்கவும்.

அடுப்பில் இருந்து இறக்கி கடைசியில் சீரகப் பொடி சேர்த்து கிளறவும்.

குறிப்புகள்:

ஹோல் மில்க் உபயோகப்படுத்துகிறவர்கள் மைதா சேர்க்காமலும் செய்யலாம் ருசி மாறது.0% fat மில்க் சேர்த்து செய்யும் போது மைதா சேர்த்தால் கலவை சற்று கெட்டியாக இருக்கும். அதக்குதான் சேர்க்கிறோம். இது இத்தாலியில் செய்யப்படும் மதிய உணவு. தக்காளி மசிந்து விட கூடாது. கிருஸ்பியாக இருக்கணும்.