மெக்ஸிகன் மேங்கோ சால்சா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று

வெங்காயம் - ஒன்று

தக்காளி - இரண்டு

நறுக்கிய சிவப்பு குடைமிளகாய் - அரைக்கோப்பை

வெங்காயத்தாள் - ஒரு மேசைக்கரண்டி

ஜாலபீனோ பெப்பர் (அ)

பச்சைமிளகாய் - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - ஒரு தேக்கரண்டி

சீரகப்பொடி - ஒரு சிட்டிகை

சர்க்கரை - ஒருதேக்கரண்டி

உப்புத்தூள் - அரைதேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - இரண்டு தேக்கரண்டி

கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

மாம்பழம், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நொறுங்க நறுக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு கோப்பையில் நறுக்கியதைப் போட்டு மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.

இந்த சுவையான சால்சாவை சிப்ஸ் மற்றும் கிரில் செய்த மீன், இறால், கோழி ஆகியவற்றுடன் பக்க உணவாக பரிமாறவும்.

குறிப்புகள்: