மெக்ரோன்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 2

சீனி - 2 கப்

வெண்னெய் - 4 தேக்கரண்டி

தேங்காய் பௌடர்/தேங்காய் துருவினது - ஒரு கப்

க்ரீம் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முட்டையில் வெள்ளை கருவை மட்டும் எடுத்து வெண்ணெய் சேர்த்து நன்கு நுரை வர அடித்து கொள்ளவும். அதிலேயே சீனியும் சேர்க்கவும்.

அதில் தேங்காய் துருவலையும் சேர்க்கவும். ஒரு தட்டில் ஒரு தேக்கரண்டி மைதா மாவு போட்டு அதன் மீது இந்த கலவை ஊற்றி சின்ன துண்டுகளாக போட்டு ஒவனில் 150 டிகிரி ஹீட்டில் 30 நிமிடம் வைத்து வேக விடவும்.

ஒவனில் இருந்து எடுத்த பிறகு அதன் மீது ஸ்ட்ராபெர்ரி பழம் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த இனிப்பு குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடியது. எளிதில் செய்யக் கூடியது

அவரவர் அவனின் அமைப்பை பொருத்து வெப்பம் ஏற்றி இறக்கிக் கொள்ளவும்.