மெக்சிகன் ரைஸ் (1)
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
மிளகாய் வற்றல் - 10
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 2
குடமிளகாய் - 1 நீட்டமாக கட் செய்தது.
எண்னெய் - 3 தே.க
அஜினோமோட்டோ - 1/4 தே.க
செய்முறை:
முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிரியா வேகவைத்து கொள்ளவும்.
பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து கரகர அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை
போட்டு நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின் குடமிளகாயையும் போட்டு அதில் அரைத்த விழுதையும்
போட்டு பச்சை வாசனை போனவுடன் அஜீனோமோட்டையும் வெந்த
சாததையும் போட்டு நன்றாக கலக்கவும்.
கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் ஒரு மிளகாய் வற்றலை க்ரஷ்
செய்து போடவும்.
அந்த எண்ணெயை சாதத்தின் மேல் ஊற்றவும்.
நல்ல காரசாரமாக சாதம் சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்புகள்:
இது கொஞ்சம் காரமாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும்.