மெக்சிகன் சாட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ராஜ்மா - ஒரு கப் மக்கா சோளம் - அரை கப் உருளை - 2 (சிறியது) வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - 2 சீரக பொடி - கால் தேக்கரண்டி சாட் மசாலா - கால் தேக்கரண்டி கெட்டி தயிர் - கால் கப் மல்லி சட்னி - கால் கப் புளி சட்னி - கால் கப் எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மல்லி தழை

ஓமப்பொடி - மேலே தூவ

செய்முறை:

தயிரை சாட் செய்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே குளிர வைக்கவும். ராஜ்மாவை 4 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்து வைக்கவும். சோளம் மற்றும் உருளையையும் வேக வைத்து எடுத்து வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியில் உள்ள விதையை உபயோகிக்க வேண்டாம்.

இரண்டு வகையான சட்னி

சீரக தூள்

உப்பு

எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.

வேக வைத்த ராஜ்மா

சோளம்

உருளை

நறுக்கிய வெங்காயம்

தக்காளி

பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சேர பிசையவும்.

கலந்து வைத்துள்ள சட்னியை இதில் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

பரிமாறும் போது இந்த சாட் கலவையை முதலில் இட்டு

அதற்கு மேல் குளிர வைத்த தயிரை நன்றாக கலக்கி ஆங்காங்கே ஊற்றவும் அதன் பிறகு சிறிதளவு சாட் மசாலா (தேவையெனில்) மல்லி தழை மற்றும் சேவ் சேர்த்து பரிமாறவும். மாலை நேர சுலபமான சுவையான சத்தான சிற்றுண்டி தயார்.

குறிப்புகள்: