முற்றிய பலாப்பழ சிப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஒரளவு முற்றிய பலாப்பழசுளை (விதைநீக்கியது) - 250 கிராம்

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

சின்னசீரக(சீரகம்) தூள் - ஒரு தேக்கரண்டி

மல்லி(தனியா) தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

உப்பு - விரும்பிய சுவைக்கேற்ப

எண்ணெய் - தேவையானளவு

செய்முறை:

பலாப்பழச்சுளையை நீள நீளமாக (சிப்ஸ்க்குஏற்றதாக) வெட்டி கொள்ளவும்.

அதன் பின்பு அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், சின்னசீரக (சீரகம்)தூள், மல்லி (தனியா) தூள், உப்பு சேர்த்து பிசறிக்கொள்ளவும். அதன் பின்பு சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்புகள்:

பலாப்பழ சிப்ஸ் மிக மிக அசத்தல் சுவையுடைய சிப்ஸ். (1) கவனிக்க வேண்டிய விஷயங்கள் - பலாப்பழச்சுளை பழுத்திருக்ககூடாது ஓரளவு காய்த்தன்மையாக இருக்கவேண்டும். (2)எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்