முறுக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மா - 1 கப்

மைதாமா - 2 கப் (அவித்தது)

எள் - 1 அல்லது 2 மேசைக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

மஞ்சள் - 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 8

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

கடலைமாவை சலித்து எடுக்கவும்.

காய்ந்த மிளகாயை அரைக்கவும்.

கடலைமா, மைதாமா, எள், சீரகம், உப்பு, மஞ்சள், அரைத்த மிளகாயை சேர்த்து கலக்கவும்.

கொதித்து சிறிதளவு ஆறிய நீரை விட்டு பிழியக்கூடிய பதத்தில் குழைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும்.

ஒரு உருண்டை மாவை எடுத்து முறுக்கு உரலில் இட்டு எண்ணெய்யில் பிழிந்து எடுக்கவும்.

முறுக்கு பொரிந்து பொன்னிறமாக வந்ததும் வடித்து எடுக்கவும்.

குறிப்புகள்:

தேங்காய்ப்பாலை காய்ச்சி ஒரு கொதி பொங்கியவுடன் இறக்கி சிறிது ஆறிய பின்பு மாவின் மேல் ஊற்றி குழைக்கலாம். அடுப்பில் பிழிய கஷ்டம் என்றால் இடியப்ப தட்டில் மேற் பகுதியில் எண்ணெய் தடவி அதன் மேல் பிழிந்து எண்ணெயில் போட்டு பொரிக்கலாம்.