முர்க் மேத்தி டிக்கா(BBQ)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத கோழி - அரை கிலோ (பெரிய துண்டுகள்)

வெள்ளை மிளகு தூள் - இரண்டு மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கியது வெந்தய கீரை - ஒரு கட்டு

அரைத்த முந்திரி - எட்டு

கிரீம் - இரண்டு மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி

உப்பு - தேவைக்கு

ஆலிவ் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து எலும்பில்லாத ஒரு மீடியம் சைஸ் துண்டுகளாக போட்டு மேலே உள்ள அனைத்து பொருட்களையும் கலந்து ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

வெந்த கீரையை நல்ல மண்ணில்லாமல் ஆய்ந்து பொடியாக அரிந்து கழுவி கொள்ளவும்.

பிறகு க்ரில் (அ) BBQ செய்யவும். ஓவன் க்ரிலிலும் வைக்கலாம், இரண்டு வசதியும் இல்லாதவர்கள் எண்ணெயில் பொரித்து சாப்பிடுங்கள்.

குபூஸ், சப்பாத்தி சாலடுடன் சாப்பிடவும்

குறிப்புகள்:

இதே மாதிரி பீஃப், இறால், மட்டனிலும் செய்யலாம்.