முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 2

வெட்டிய வெங்காயம் - 4 மேசைக்கரண்டி

வெட்டிய உள்ளி - 4 மேசைக்கரண்டி

புளி - சிறிய பாக்களவு

உப்பு

பெரிய சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு

கறித்தூள் - 1- 11/2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 1 நெட்டு

செய்முறை:

முருங்கைக்காயை விரல்நீள துண்டுகளாக வெட்டி பிளக்கவும்.

புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு முருங்கைக்காய் துண்டுகளை சிவக்க பொரித்து(deep fry) எடுக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அதனுள் வெங்காயம், உள்ளி, கடுகு, பெரிய சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் பொரித்த முருங்கைக்காய் துண்டுகளைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் புளிக்கரைசல், 1/2கப் தண்ணீர், கறித்தூள், உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும்.

குழம்பு ஓரளவு தடிப்பானதும் (எண்ணெய் பிறக்கும்) இறக்கவும்.

சுவையான முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார். இதனை சோறு, இடியப்பம், புட்டு என அனைத்து உணவுகளுடனும் பக்க உணவாக சாப்பிடலாம்.

குறிப்புகள்:

இலங்கையில் தண்ணீருக்கு பதில் தேங்காய்ப்பாலை விட்டு சமைப்பார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.