முந்திரி முறுக்கு
தேவையான பொருட்கள்:
(ஊறிய, அரைத்த)முந்திரிவிழுது - அரை கப்
அரிசிமா - ஒரு கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
எள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு (விரும்பினால்)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் (ஊறி, அரைத்த)முந்திரிவிழுது அரிசிமா, நெய், எள், உப்பு, பெருஞ்சீரகம்(சோம்பு) ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
மாவை கலக்கிய பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடாகிய பின்பு முறுக்கு உரலில் முறுக்கு அச்சு போடவும்.
பின்பு கலந்து வைத்திருக்கும் மாவில் சிறிதளவு எடுத்து அதனை அச்சு போட்ட முறுக்கு உரலில் போடவும்.
பின்பு சூடாகிய எண்ணெயில் அச்சில் போட்டமாவினை முறுக்கு வடிவில் பிழியவும்.
எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்த மாவினை போட்ட பின்பு அதனை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொன்னிறமாக பொரித்த முறுக்கினை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இப்படியே மிகுதியாக உள்ள எல்லா மாவினையும் பொரித்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இப்போது சுவையான சத்தான முந்திரிமுறுக்கு தயாராகி விட்டது. ஒரு தட்டில் சுவையான சத்தான முந்திரி முறுக்கு சிலவற்றை வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
முந்திரி முறுக்கு மிகமிக சுவையானது. செய்வதற்கும் மிகவும் இலகுவானது. இதில் இலிப்பிட்டு கார்போஹைட்ரேட்ஸ், நார்சத்து, கொழுப்பு, புரதம், தியமின், ரைப்போஃப்ளேவின், அயோடின், வைட்டமின் B3,B5,B6,B9,C, கால்சியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, பொட்டாஷியம் போன்ற பல சத்துகள் காணப்படுகிறது. முந்திரி(cashew)யின் சுவையை எல்லோரும் விரும்பி உண்பார்கள். ஆகவே இதன் சுவையையும், இதில் காணப்படும் சத்துகளையும் அறிய முந்திரி முறுக்கை செய்து பார்த்து சாப்பிட்டு அறியவும்.
கவனிக்க வேண்டிய விசயங்கள்- நன்றாக ஊறிய அரைத்த முந்திரி விழுது எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். எச்சரிக்கை - முந்திரி அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.