முதபெல் (egg plant dip)
0
தேவையான பொருட்கள்:
பெரியவகை கத்திரிக்காய் - ஒன்று
அரை கப்க்கும் சற்று குறைந்தளவு தஹீனா / அரைத்த எள் விழுது
பூண்டு - ஒரு பல்
எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
கத்திரிக்காயை அவனில் வைத்து 40 நிமிடம் ரோஸ்ட் செய்யவும். பின் குளிர்ந்ததும் அதன் தோலை உரித்தால் வந்து விடும்.
அதில் மேற்கண்ட பொருட்களில் ஆலிவ் எண்ணெய் தவிர்த்து மற்றவைகளை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் அடிக்கவும்.
பிறகு பரந்த பாத்திரத்தில் பரப்பி அதன் மேல் ஆலிவ் எண்ணெய் ஊற்றி பார்ஸ்லி இலையால் அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்புகள்:
குபூஸ், குப்ப போன்ற வகை உணவுகளுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் அரபு வகை உணவு இது. காரம் வேண்டியவர்கள் மிளகாய் தூள், குருமிளகுத் தூள் சேர்த்து செய்யலாம்.