முதபெல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வகைக் கத்தரிக்காய் - ஒன்று டாஹினி - அரை கப்புக்கும் சற்று குறைவாக பூண்டு - ஒரு பல் லெமன் சாறு - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு ஆலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி பார்ஸ்லி (அலங்கரிக்க)

செய்முறை:

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து ஐந்து

ஆறு இடங்களில் நீளமாக

ஆழமாகக் கீறிக் கொள்ளவும். துண்டுகள் பிரிந்துவிடக் கூடாது.

அப்படியே ஒரு தட்டில் வைத்து 5 நிமிடத்திற்கு அதி உயர் வெப்பநிலையில் மைக்ரோவேவ் செய்யவும். பிறகு நான்கு அல்லது ஐந்து முறை

காயை ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிப் போட்டு ஒவ்வொரு முறையும் இரண்டிரண்டு நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்யவும். தேவையானால் மேலும் ஒன்றிரண்டு நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.

தொடக் கூடிய அளவுக்கு ஆறியதும் துண்டுகளைப் பிரித்து தலைப் பகுதியில் மட்டும் சிறிது வெட்டி நீக்கிவிட்டு

மீதிச் சதைப் பாகத்தை

கத்தியின் பின் பக்கத்தைக் கொண்டு வழித்து எடுக்கவும்.

நன்கு ஆறவிட்டு

டாஹினி

பூண்டு

லெமன் சாறு

உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு பேஸ்ட் போல் அடித்து

அகலமான பாத்திரமொன்றில் பரப்பவும்.

அதன் மேல் ஆலிவ் எண்ணெயை ஊற்றி

பார்ஸ்லி இலையால் அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்புகள்: