முட்டை ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமைமா (மைதாமா) - 500 கிராம்

உப்பு - தேவையானளவு

பால் - ஒரு மேசைக்கரண்டி

பட்டர் - ஒரு மேசைக்கரண்டி

கொதிநீர் - (1- 2) கப்

எண்ணெய் - தேவையான அளவு

முட்டை - 5

மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை:

கோதுமைமா, உப்பு, பால், பட்டர் ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும்.

குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும்.

அதன் பின்பு அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணெய் தடவவும்.

பின்பு வட்டமாக தட்டிய மாவினை போட்டு அதற்கு மேல் முட்டையை உடைத்து ஊற்றி விரும்பினாள் மிளகுத்தூள் போட்டு வேக விடவும்.

அது வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும். இருப்பக்கமும் வெந்ததும் சுவையான ரொட்டி தயராகி விடும் .

இதனைப்போல மற்றைய ரொட்டிகளையும் தயார் செய்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட், மினரல், உயிர்சத்துகள் நிறைந்தது. சுவையானது. சிறுவர்கள் விரும்பி உண்ணும் ஒர் சிற்றுண்டி முட்டை ரொட்டி ஆகும். (1)எச்சரிக்கை - இருதய, சர்க்கரை நோயாளிகள் வைத்தியரின் ஆலோசனைப்படி சாப்பிடவும். (2)மாற்று முறை - கொழுப்பு பட்டருக்கு பதிலாக கொழுப்பு குறைந்தபட்டரோ அல்லது எண்ணெய் பாவிக்கலாம். பால்க்கு பதிலாக தயிர் பாவிக்கலாம். (3)கவனிக்க வேண்டிய விஷயங்கள - ரொட்டி நன்றாக வெந்துவிட்டதா என்பதை கவனிக்கவும். ஒரளவு மிதமான தீயில் வேகவிடவும். பால் பட்டர், முட்டை ஆகியவற்றை சேர்த்து செய்த ரொட்டி மென்மையாக இருக்கும் .