முட்டை சேமியான்
0
தேவையான பொருட்கள்:
ஏதாவது ஒருவகை சேமியான் - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
முட்டை - இரண்டு
தக்காளி சாறு - ஒரு கோப்பை
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
பெர்ஸில் இலை - ஒரு கரண்டி
ஆலிவ் ஆயில் - நான்கு கரண்டி
உப்பு -ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் சேமியானைப் போட்டு வெந்தவுடன் வடித்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
ஒரு சட்டியில் ஆலிவ் ஆயிலை ஊற்றி வெங்காயம், தக்காளியை லேசாக வதக்கவும்.
அதிலேயே மிளகாய்தூள், பெர்ஸிலை போட்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
முட்டை பொரிந்தவுடன் வடித்த சேமியானைக் கொட்டி நன்கு கிளறவும்.