முட்டைக் கோப்பி
தேவையான பொருட்கள்:
முட்டை - ஒன்று
காஃபித்தூள் - ஒரு தேக்கரண்டி (மட்டமாக)
சீனி - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)
கொதிநீர் - ஒரு டம்ளர்
செய்முறை:
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்திலிட்டு அதனுடன் சீனியையும் சேர்த்து நன்றாக நுரை பொங்கக் கூடியதாக அடிக்கவும்.
ஒரு டம்ளரில் காஃபித்தூளை போட்டு அதனுடன் கொதிநீர் விட்டு நன்றாக கலக்கவும்.
பின்பு அடித்த முட்டையுள்ள பாத்திரத்தில் சூடான காஃபியை சிறிது சிறிதாக ஊற்றிக் கொண்டு முள்ளுக்கரண்டியால் இடை விடாது அடிக்கவும்.
அடிக்கும் போது அதில் நுரை வரும் அந்த நுரையுடன் பரிமாறவும்.
குறிப்புகள்:
முட்டை கோப்பி புரதச்சத்து, மினரல் நிறைந்த பானம். எச்சரிக்கை - சர்க்கரைநோயாளர், இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி முட்டைக்கோப்பி அருந்தவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - (1) அடித்த முட்டையுள்ள பாத்திரத்தில் சூடான கோப்பியை சிறிது சிறிதாக ஊற்றிக் கொண்டு முள்ளு கரண்டியால் இடை விடாது அடிக்கவும். (2) அடித்த முட்டையுள்ள பாத்திரத்தில் சூடான கோப்பியை ஊற்றும் போது முட்டை அவியாது பார்த்து கொள்ள வேண்டும்