மீ கொரீங்
தேவையான பொருட்கள்:
ரைஸ் நூடுல்ஸ் - அரை பாக்கெட்
ஸ்ப்ரவுட் - ஒரு கப்
கடுகு கீரை - ஒரு கட்டு
பெரிய வெங்காயம் - ஒன்று
கேரட்,சிகப்பு,பச்சை குடைமிளாகாய்
முட்டை கோஸ்} - இவை அனைத்தும் நீளவாக்கில் அரிந்தது ஒரு கப்
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 2
சில்லி பேஸ்ட் - 2 தேக்கரண்டி
knorr ikan bulis cube(நெத்திலி க்யூப்)- ஒன்று
சோயா சாஸ் - இரண்டு ஸ்பூன்
முட்டை - ஒன்று
எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் அளவு தண்ணீர் விட்டு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு தள தளவென்று கொதித்ததும்,அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு நூடுல்ஸை அதில் மூழ்கும் படி போட்டு மூடி வைத்து விடவும்.
பூண்டை தோலுரித்து,பச்சைமிளகாயையும் சேர்த்து கரகரப்பாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.அரிந்த காயோடு வெங்காயத்தையும் நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.
கடுகு கீரையை நன்கு அலசி விட்டி அடிபாகத்தை மட்டும் அரிந்து நீக்கி விட்டு,பிறகு ஒரு இன்ச் அளவு முழுவதையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஸ்ப்ரவுட்டையும் நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது வடிதட்டில் நூடுல்ஸையும் வடிக்கட்டி வைத்து விடவும்.(நன்கு வெந்து இருக்கும்)
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,நெத்திலி க்யுபை போட்டு வதக்கவும் கரைந்து கொண்டிருக்கும் போதே நசுக்கி வைத்திருக்கும் பூண்டு,மிளகாயை சேர்த்து சிறிது வதக்கவும்.
பின்பு க்நறுக்கிய காய் அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன்பின் ஸ்ப்ரவுட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது சில்லி பேஸ்ட்,சோயா சாஸ் சேர்த்து நன்கு வதக்கி விட்டு முட்டை உடைத்து ஊற்றி கிளறி விட்டு,கீரையையும் சேர்த்து நன்கு தண்ணீர் இல்லாதவாறு வதக்கவும்.
நல்ல மணம் வரும் போது நூடுல்ஸை சேர்த்து நன்கு ஒன்று சேர கிளறி அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் விடவும்.
நன்கு எல்லாம் ஒன்று சேர்ந்து சூடு ஏறியதும் இறக்கி வைத்து விடவும்.
மிகவும் வித்தியாசமான சுவையுடைய மீ கொரீங் ரெடி....
குறிப்புகள்:
இது காலை மற்றும் இரவு நேரங்களில் சாப்பிட நன்றாக இருக்கும்.
க்யூபில் உப்பு இருப்பதால் பெரும்பாலும் போட வேண்டிய அவசியமில்லை.இருப்பினும் எல்லாம் ஒன்று சேர கிளறியதும்,சிறிது சுவை பார்த்து போதவில்லை என்றால் உப்பு சேர்த்து கொள்ளலாம்.