மீன் மக்ரோனி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மக்ரோனி - ஒரு பாக்கெட் டூனா டின் - 2 கடுகு - ஒரு தேக்கரண்டி வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 5 எண்ணெய் - 3 தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து டொமேட்டோ சாஸ் - 4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சீஸ் - விரும்பினால்

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்

மக்ரோனியுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து

நறுக்கிய வெங்காயம்

கறிவேப்பிலை மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி

3 தேக்கரண்டி டொமேட்டோ சாஸ் ஊற்றி நன்கு வதக்கவும். அதன் ஈரத்தன்மை போனதும்

டூனா மீனை உதிர்த்துப் போட்டு நன்கு பிரட்டவும்.

பிறகு வேக வைத்த மக்ரோனியை சேர்த்துக் கிளறவும். சுவையான டூனா மீன் மக்ரோனி ரெடி. மீதமுள்ள டொமேட்டோ சாஸ் ஊற்றி

சீஸ் தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: