மீன் சாலட்(grouper fish)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீனில் ஊறவைக்க:

ஹமூர் மீன் ஃபில்லெட் - அரை கிலோ

எலுமிச்சைச்சாறு - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மல்லி பொடி - கால் தேக்கரண்டி

நீளமாக நறுக்கிய இஞ்சி - அரை இன்ச் துண்டு

பிரட்டுவதற்கு:

சிவப்பு நிற குடைமிளகாய் - 1/2 (தண்ணீரில் முழுவதாக போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து தோல் உரித்து மிகவும் பொடியாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய செலரி ஸ்டிக் - கால் கப்

பொடியாக நறுக்கிய டில் இலைகள் - கால் கப்

பொடியாக நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் - கால் கப்

எலுமிச்சைச்சாறு - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

ஆலிவ் எண்ணெய் - 4 தேக்கரண்டி

செய்முறை:

ஹமூர் மீனில் ஊறவைக்க வேண்டியவைகளை போட்டு 2 மணிநேரம் வைத்து பின் ஒரு இரும்பு தவாவில் எண்ணெயில்லாமல் சுட்டு எடுக்கலாம் அல்லது க்ரில் செய்யவும்.

பின் மீனை இரண்டு ஃபோர்க்கால் சின்ன சின்ன துண்டுகளாக்கவும். பிறகு பிரட்டக் கொடுத்துள்ளவற்றை மிகப் பொடியாக நறுக்கி இதனுடன் கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்:

catfish உம், grouper உம் ஒரே போல இருக்கும். அதனால் பார்த்து வாங்குங்கள். இதனை ஸ்டார் ஹோட்டல்களில் பரிமாறுவார்கள். மிகவும் சுவையாக இருக்கும்