மீட் பால்ஸ் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்:
மீட் பால்ஸ் - 8 -12
வெங்காயம் - 1 பெரியது
கேரட் - 1
குடை மிளகாய் - 1
கோஸ் - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
சூப் க்யூப் - 1
சோய் சாஸ் - 1-2 டீஸ்பூன்
டொமேட்டொ சாஸ் - 1 -2 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 -2 டீஸ்பூன்
கார்ன் மாவு - 1-2 டேபிள்ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் - 2
செய்முறை:
முதலில் மீட் பால்ஸ் ரெடி பண்ணிக்கொண்டாலும் சரி, இல்லையெனில் ஃபுரோசன் வாங்கிக்கொள்ளலாம். அதனை கொஞ்சம் எண்ணெய் விட்டு பொரித்துக்கொள்ளவும்.
கேரட்,கோஸ்,குடைமிளகாய், ஆனியன், நீள்வாக்கில் கட் செய்து கொள்ளவும்.ஸ்பிரிங் ஆனியன் சிறிதாக கட் செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், காய்கள், வதக்கி சூப் க்யூப் சேர்க்கவும்,அதிலேயே உப்பு இருக்கும் ,பின்பு சோய் சாஸ், சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் சேர்த்து மீட் பால்ஸ் போட்டு பிரட்டவும்.
பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன் மாவை ஒரு சிறிய கப் அளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும். ஸ்பிரிங் ஆனியன் கட் செய்து தூவவும்.
சுவையான மீட் பால்ஸ் மஞ்சூரியன் ரெடி.
குறிப்புகள்:
இது நாண், பரோட்டா, சப்பாத்தி உடன் பரிமாறலாம்.