மிர்ச் மசாலா
தேவையான பொருட்கள்:
பச்சை குடைமிளகாய் - 2 சிகப்பு குடைமிளகாய் - 2 மஞ்சள் குடைமிளகாய் - 1 வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி வெள்ளை எள் - அரை கப் துருவிய தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி கலோஞ்சி (நைஜெல்லா சீட்ஸ்) - அரை தேக்கரண்டி கடுகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எள் மற்றும் தேங்காயை எண்ணெயில்லாமல் வறுத்து பொடித்து வைக்கவும். வெங்காயம்
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். குடைமிளகாய்களை விதையில்லாமல் சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய்களை சேர்த்து வதக்கவும். ஓரங்கள் சிவந்து ஓரளவுக்கு வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு
சீரகம்
கலோஞ்சி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொரிய விடவும். பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இதனுடன் பச்சை மிளகாய்
மிளகாய் தூள்
உப்பு
எள்ளு தேங்காய் பொடி சேர்த்து வதக்கவும்.
ஐந்து நிமிடம் வதக்கிய பின்னர் முன்னமே வதக்கி வைத்துள்ள காப்சிகம் சேர்த்து வதக்கவும்.
மூன்று நிமிடம் கழித்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் தீயை குறைத்து வைக்கவும்.
குறைந்த தீயிலே ஐந்து நிமிடம் வேக விடவும். இடையிடையே கிளறி விடவும். கிரேவி கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும். சுவையான மிர்ச் மசாலா ரெடி. இது சூடு சாதம் சப்பாத்திக்கு சரியான வித்தியாசமான காம்பினேஷன்.