மாஸ்மலோ (1)
தேவையான பொருட்கள்:
வாசனையற்ற ஜெலட்டீன் - 21 கிராம் (3 தேக்கரண்டி)
சீனி - 400 கிராம் (2 கப்)
வெனிலா (விருப்பமான) - 15மி.லி (ஒரு தேக்கரண்டி)
ஐஸிங் சீனி - தேவையான அளவு
நிறங்கள் - விருப்பமானது
தண்ணீர் - (120 மி.லி + 60 மி.லி) - 180 மி.லி (அரை+கால்=முக்கால்கப்)
பட்டர் - தேவையான அளவு
கோன் சிரப் - 160 மி.லி (மூன்றில் இரண்டுகப்)
உப்பு - கால் தேக்கரண்டி (15 மி.லி)
செய்முறை:
ஒரு தட்டு (9 தர13 இஞ்சி) முழுவதற்கும் பட்டர் பூசி அதன் மேல் ஐஸிங் சீனி பூசவும்.
ஒரு பாத்திரத்தில் வாசனையற்ற ஜெலட்டீன்(21கிராம்) முழுவதையும் குளிர் தண்ணீரில்(120 ml) நனைத்து 10 நிமிடத்திற்கு கரைக்கவும் (கட்டிப்படாமல்).
வேறொரு பாத்திரத்தில் இலங்கைசீனி (இந்தியா சர்க்கரை),கோன் சிரப், தண்ணீர்(60 மி.லி) சேர்த்து கலந்து அதை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
(250 பரனைட் பாகையில் அல்லது 120 சென்டி கிரேட்டில் ஒரு நிமிடம் மட்டும் சூடாக்கவும். (ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிது கலவையை போட்டு பார்த்தால் அது சிறிய கடினமான பந்து போல வரும்).
அதன் ன்பு அதை இறக்கி (சீனி கலவை) ஜெலட்டீன் கலவையுடன் கலந்து( இரண்டு கலவையையும் ஒன்றாக கலந்து )மிக்ஸரால் (mixer)(பீட்டரால்) (light speed)10நிமிடம் (வெள்ளைத்துகளாக வர) அடிக்கவும்.
அதன் பின்பு உப்பு கலந்து ஒரளவு (high speed)அடிக்கவும். மாஸ்மலோ புளப்பியானதும் (எல்லாம் சேர்ந்து ஒரளவு தடிப்பானதும்)வெனிலா, நிறங்கள்(விருப்பமானது)கலந்து நன்றாக (நுரைக்க) அடிக்கவும்.
நன்றாக நுரைத்ததும் பட்டர் தடவிய தட்டில் ஊற்றி 4 மணித்தியாலம் இக்கலவை பாத்திரத்தை அசையாமல் குளிர்சாதனப்பெட்டியில் டீப் ப்ரீசரில்)அல்லது சமையல் அறை மேசையில் இக்கலவை பாத்திரத்தை அசையாமல் ஒரு முழு இரவு வைத்து குளிர விடவும்.
பின்பு (அடுத்த நாள்)கூரான கத்தியால் தேவையான அளவில் துண்டாக வெட்டவும்.
வெட்டிய துண்டுகளை ஐஸிங் சீனியில் போட்டு பிரட்டிவைக்கவும். அதன் பின்பு அதை பரிமாறவும்.
குறிப்புகள்:
சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விருப்பமான இனிப்பு உணவு. (1) கவனிக்க வேண்டிய விஷயங்கள் - நன்றாக (நுரைக்க) அடிக்கவும், 4 மணித்தியாலம் (குளிர்சாதனப்பெட்டியில் டீப் ப்ரீசரில்) அல்லது சமையல் அறை மேசையில் இக்கலவை பாத்திரத்தை அசையாமல் ஒரு முழு இரவு வைத்து பின்பு அடுத்த நாள் குளிர விடவும் ,கூரான கத்தியால் வெட்டவும். வெட்ட கடினமான இடங்களில் ஜஸிங் சீனி போட்டு இலகுவாக வெட்டவும். ஒரு கிழமை வைத்தும் உண்ணலாம் (2) எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி ஒரளவு உண்ணவும்.