மாலு பாண்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மா - 3 பேணி

ஈஸ்ட் - 3 தேக்ககரண்டி

சீனி - ஒரு தேக்ககரண்டி

பட்டர் - அரை தேக்ககரண்டி

முட்டை (மஞ்சள் கரு) - ஒன்று

உப்பு - தேவையான அளவு

மீன் டின் பிரட்டல் கறி - தேவையானளவு

உப்பு - தேவையான அளவு (ஒரு தேக்கரண்டி)

எண்ணெய் - தேவையானளவு

செய்முறை:

ஈஸ்ட், சீனி இரண்டினையும் ஒரு கண்ணாடிக் குவளையில் போட்டு மூன்று தேக்கரண்டி இளம் சூடான தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும் (2 நிமிடங்களுக்குள் இக்கலவை பொங்கி வரும்).

இக்கலவை பொங்கி வந்த பின்பு இதில் மா, உப்பு, பட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள்.

இதை கொஞ்ச நேரம் மூடியினால் மூடி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதனை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு உருண்டையினுள்ளும் மோதகத்தில் வைப்பது போல் மீன் டின் பிரட்டல் கறியினை போட்டு மூடி வட்டமாக உருட்டிக் கொள்ளுங்கள்.

பின்னர் எண்ணெய் தடவிய தட்டில் எல்லா உருண்டைகளையும் அடுக்கிக் கொள்ளுங்கள்.

வேகும் போது பாணின் மேற்பக்கம் பொன்னிறமாக வருவதற்கு நன்றாக அடித்த முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தூரிகையினால் (Brush) தொட்டு பூசிவிடுங்கள்.

200 டிகிரி Cயில் 15 நிமிடங்கள் 150 டிகிரி C யில் 20 நிமிடங்கள் அவனில் பேக் பண்ணி கொள்ளுங்கள். நன்றாக பேக் பண்ணியதும் அதை பரிமாறவும்.

குறிப்புகள்:

இலங்கையில் உள்ள சிங்கள மக்களால் விரும்பி உண்ணப்படும் ஓர் சிற்றுண்டி மாலு பாண் ஆகும். இதில் கார்போஹைட்ரேட், மினரல், புரதம், வைட்டமின் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது அத்துடன் மாலு பாண் மிக மிக சுவையானது.

எச்சரிக்கை - சர்க்கரைநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - ஈஸ்ட் சீனி இரண்டினையும் ஒரு கண்ணாடிக் குவளையில் போட்டு மூன்று தேக்கரண்டி இளம் சூடான தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். (2 நிமிடங்களுக்குள் இக்கலவை பொங்கி வரும்)