மாம்பழ, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
0
தேவையான பொருட்கள்:
மாம்பழ துண்டுகள் - 2 கப்
ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் - 2 கப்
பால் - 2 கப்
சீனி (சர்க்கரை) - 6 மேசைக்கரண்டி
வெனிலா - ஒரு துளி
ஐஸ் கட்டி - ஒரு கப்
செய்முறை:
மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை நன்றாக மிக்ஸியில் (கிரைண்டரில்) அடிக்கவும்.
அதனுடன் பால், சீனி, வெனிலா, ஐஸ்கட்டி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடிக்கவும். அதன் பின் டம்ளரில் ஊற்றி பரிமாறவும் .
குறிப்புகள்:
இதை தினமும் குடித்தால் உங்கள் உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு வலு சேர்க்கும். பழங்களை ஜுஸ் செய்யும் போது வெட்டி(நறுக்கி) செய்தால் சத்துகள் வீணாகாது விரும்பினால் சீனி (சர்க்கரை) சேர்க்கலாம். ஆனால் சீனி சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும். சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி இதை குடிக்கவும்.