மாதுளம்பழ ஜூஸ்
0
தேவையான பொருட்கள்:
மாதுளம்பழ (முத்துகள்) - ஒரு கப்
பால் - 2 கப்
வெனிலா - ஒரு தேக்கரண்டி
சீனி (சர்க்கரை) - 6 தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
தண்ணீர் - ஒரு கப்
செய்முறை:
மாதுளம்பழ(முத்துகள்), தண்ணீர் ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு அடித்து அதனை வடிக்கட்டிக் கொள்ளவும் (விதை இல்லாமல்).
வடித்த மாதுளைச்சாற்றுடன், பால், வெனிலா, சீனி (சர்க்கரை), உப்பு ஆகியவற்றை கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இரத்தத்தை விருத்தி செய்யும் ஜூஸ். அதை வடிக்கவும் (விதை இல்லாமல்)