மாதுளம்பழ சாலட்
0
தேவையான பொருட்கள்:
மாதுளம்பழம் (முத்துகள்) - ஒரு கப்
தயிர் - 2 கப்
நறுக்கிய பச்சைமிளகாய் - 2
நீளமாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
உப்பை வெங்காயத்துடன் சேர்க்கவும் (அதில் பிரியும் தண்ணீரை பிரிக்கவும்).
பரிமாறும் முன் உப்பு சேர்ந்த வெங்காயத்துடன் தயிர் மாதுளை முத்துகள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இரத்தத்தை விருத்தி செய்யும் சாலட். பரிமாறும் முன் உப்பு சேர்த்த வெங்காயத்துடன் தயிர் மாதுளை முத்துகள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை கலந்து பரிமாறவும் (முதலிலே செய்து வைத்தால் பழுதடைந்து விடும்).