மாங்காய் சொதி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய மாங்காய் - 1

வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

தேங்காய்ப்பால் (முதற்பால்) - 1/4 கப்

தேங்காய்ப்பால் (இரண்டாம் பால்) - 1 கப்

கறிவேப்பிலை - 1 நெட்டு

உப்பு

செய்முறை:

மாங்காயை சிறிய துண்டுகளாக வெட்டவும்.

இரண்டாம் தேங்காய்ப்பாலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் (தேங்காய் முதற்பால் தவிர) வெட்டிய மாங்காயுடன் சேர்த்து அவியவிடவும்.

மாங்காய் நன்கு அவிந்ததும் அதனுள் முதற்பாலை விட்டு கொதிக்க விடவும்.

ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

சுவையான மாங்காய் சொதி தயார். இதனை இடியப்பம், சோறுடன் சாப்பிடலாம்.

குறிப்புகள்:

தேங்காய்ப்பால் எடுக்கும் முறை: 1/4 கப் தேங்காய்ப்பூவினுள் 1/4 கப் தண்ணீர் விட்டு பிழிந்து பாலை தனியாக எடுத்து வைக்கவும் - முதற்பால்.

மீண்டும் அதே பிழிந்த தேங்காய்ப்பூவினுள் 3/4 - 1 கப் தண்ணீர் விட்டு பிழிந்து பால் எடுக்கவும் - இரண்டாம் பால்.