மாங்காய் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்காய் (பெரியது) - ஒன்று

மிளகாய்தூள் (இலங்கை) - 2 தேக்கரண்டி

சீனி (இந்தியா சர்க்கரை) - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் (சோம்பு) - அரை தேக்கரண்டி

வெங்காயம் - பாதி பாகம்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - (3-5) மேசைக்கரண்டி

பால் - கால் கப்

செய்முறை:

மாங்காயின் தோலை சிவி கழுவி விதையை (கொட்டையை) அகற்றி சிறு துண்டுகளாக வெட்டவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், சீரகம் போட்டு தாளிக்கவும்

அதன் பின் அதில் வெட்டிய மாங்காய், மிளகாய்தூள் போட்டு பிரட்டவும்

நன்றாக பிரட்டிய பின் தண்ணீர் விட்டு அதன் நீர் ஒரளவு வற்றும் வரை வேக விடவும்

ஒரளவு வெந்ததும் பால் விட்டு அவியவிடவும். பால் ஒரளவு வற்றியதும் (பிரட்டலாக வந்ததும்) சீனியை (சர்க்கரை) போட்டு பின்பு சிறிது நேரம் (1- 2 நிமிடம்) விட்டு இறக்கவும்

இப்போது (இனிப்பு ,புளிப்பு ,உறைப்பு ,உவர்ப்பு) நான்கு வகை சுவையுடைய மாங்காய் கறி தயார்

குறிப்புகள்:

இனிப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு ஆகிய நான்கு வகை சுவையுடைய மாங்காய் கறி. கவனிக்க வேண்டிய விஷயங்கள் - ஒரளவு புளிப்பான மாங்காய் சிறந்தது(மாங்காயின் சுவைக்கேற்ப கறியின் சுவையில் வித்தியாசம் காணப்படும்).