மாங்காய் இஞ்சி ஊறுகாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்காய்இஞ்சி(white Turmeric) - 100 கிராம்

பச்சைமிளகாய் (நறுக்கியது) - 3

தேசிக்காய்(எலுமிச்சம்பழ) சாறு - ஒன்று

உப்பு - தேவையானளவு

கடுகு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

மாங்காய் இஞ்சியின்(white Turmeric/mango ginger) தேவையற்ற பகுதிகளை அகற்றவும். பின்பு மாங்காய் இஞ்சியின்(white Turmeric/mango ginger) தோலை சீவவும்.

தோலைசீவிய மாங்காய்இஞ்சியினை(white Turmeric/mangoginger) சிறிய சிறிய துண்டுகளாக (பொடிபொடியாக) நறுக்கவும்.

சிறிது சிறிதாக நறுக்கிய மாங்காய் இஞ்சியை(white Turmeric/mangoginger)ஈரமற்ற ஒரு பாத்திரத்தில் போடவும்.

அதனுடன் உப்பு, நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக மரக்கரண்டியால் கலக்கவும்.

நன்றாக கலந்த பின்பு அதனுடன் தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாற்றை தூவி மரக்கரண்டியால் கலக்கவும்.

பின்பு கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்யவும்.

சுத்தம் செய்த கறிவேப்பிலையை ஒரு துணியினால்(ஈரம் உறிஞ்சக்கூடிய ஒரு தாளினால்)ஈரமில்லாமல் துடைக்கவும்.

ஈரமில்லாமல் துடைத்த கறிவேப்பிலையை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும். பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து சூடாக்கவும். சூடாக்கிய பின்பு அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு தாளித்தவற்றை எடுத்து முதலில் கலந்து வைத்திருக்கும் பொருட்களுடன் போடவும்.

பின்பு மரக்கரண்டியால் எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்பு புது விதமான சுவையான மாங்காய் இஞ்சி ஊறுகாய்(white Turmeric/mango ginger pickle)தயாராகிவிடும்.

இதன் சூடு ஆறிய பின்பு சுத்தமான போத்தலில் போட்டு காற்று, தண்ணீர் போன்றவை உட்புகாதவாறு போத்தலின் மூடியை இறுக மூடி வைத்து உண்ணலாம்.

குறிப்புகள்:

மாங்காய் இஞ்சி(white Turmeric/mango ginger)யில் கொழுப்பு, புரதம், தாதுக்கள் கால்சியம், பொஸ்பரஸ், இரும்பு, மக்னீஸியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், விற்றமின் C ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது. அத்துடன் மாங்காய் இஞ்சி(white Turmeric/mango ginger)முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும், இது மாங்காய் சுவையானதும், மருத்துவ மூலிகையும் ஆகும். மாங்காய் இஞ்சியை(white Turmeric/mango ginger)உண்பதால் தீரும் நோய்களாவன - பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல் ஆகும் இப்படிப்பட்ட மாங்காய் இஞ்சியில் (white Turmeric/mango ginger) செய்யப்பட்ட ஊறுகாய் சுவையானதும் சத்துகள் நிறைந்ததும் புது விதமானதுமாகும். அத்துடன் இது நல்ல ஜீரணத்தை தரக்கூடியது. ஆகவே மாங்காய் இஞ்சி ஊறுகாய்(white Turmeric/mango ginger pickle)செய்து சாப்பிட்டு இதன் பலனை அறியவும்.

எச்சரிக்கை -

மாங்காய் இஞ்சி(white Turmeric/mango ginger pickle) அலர்ஜி உள்ளவர்கள் இருதயநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும், மாங்காய் இஞ்சி ஊறுகாய்(white Turmeric/mango ginger pickle) சாப்பிட விரும்பினால் மரவள்ளிக்கிழங்கை உண்ணகூடாது (மாங்காய்இஞ்சியும் மரவள்ளிகிழங்கும் சேர்ந்தால் நஞ்சாகிவிடும்).

கவனிக்க வேண்டிய விசயங்கள் -

மாங்காய் இஞ்சி(white Turmeric/mango ginger) போட்டு வைத்திருக்கும் போத்தலில் ஈரம் உட்புகாதவாறு கவனமாக பாவித்தால் நீண்ட நாட்களுக்கு வைத்து பாவிக்கலாம் ,அத்துடன் மாங்காய் இஞ்சியை(white Turmeric/mango ginger)செய்யும் போதும் சுத்தமாகவும் ஈரம்பாடாமலும் கவனமாகவும் செய்யவும்.

மாற்று முறை -

மாங்காய் இஞ்சிக்கு (white Turmeric//mango ginger)பதிலாக கறிக்கு பயன்படுத்தும் இஞ்சியையும் பயன்படுத்தலாம்.