மஸ் ரோஷி (Mas Roshi)
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு - 2 கப்
2. ஸ்மோக்டு டூனா - சிறிது
3. வெங்காயம் - 2
4. பச்சை மிளகாய் - 3
5. தேங்காய துருவல் - 1/2 கப்
6. எலுமிச்சை - 1
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. உப்பு
9. கறிவேப்பிலை - சிறிது
10. எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
மாவுடன், உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
டூனா மீனை சிறு துண்டுகளாக ஆக்கி அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து துருவிய தேங்காய், உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு கலந்து பிசைந்து வைக்கவும்.
மாவை சிறு உருண்டைகளாக எடுத்து தேய்த்து அதன் உள்ளே மீன் கலவை வைத்து மூடி மீண்டும் சற்று திக்காக திரட்டி வைக்கவும்.
தோசை கல் சூடானதும் சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும். எண்ணெய் விட தேவை இல்லை.
குறிப்புகள்:
இது மாலத்தீவின் உணவு வகை. டீயுடன் ஸ்னாக்ஸ் போல சாப்பிடுகிறார்கள். மஸ் என்பது மீனை குறிக்கும். விரும்பினால் சிறிது இஞ்சி பொடியாக நறுக்கி சேர்க்கலாம், கலவையை மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தியும் எடுத்து பயன்படுத்தலாம். இதை மஸ் ஹுனி ரோஷின்னும் (Mas Huni Roshi) சொல்வார்கள். தேங்காய் துருவல் சேர்ப்பதால்.