மஷ்ரூம் ரிஸோட்டோ
தேவையான பொருட்கள்:
ஷார்ட் கிரைன் ஒயிட் ரைஸ் - ஒன்றரை கோப்பை
நறுக்கிய காளான் - மூன்று கோப்பை
ஃபுரோஜன் பீஸ் - ஒரு கோப்பை
பார்மஜான் சீஸ் - கால் கோப்பை
வெஜிடபிள் ஸ்டாக் - மூன்று கோப்பை
வெண்ணெய் - நான்கு மேசைக்கரண்டி
பூண்டு - இரண்டு பற்கள்
வெங்காயம் - ஒன்று
பேஸில் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரைதேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு உருக்கி வெங்காயம், பூண்டு மற்றும் காளானைப்போட்டு வதக்கவும்.
காளான் நன்கு வதங்கியவுடன் அரிசியைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து வெஜிடபிள் ஸ்டாக்கில் பாதியை ஊற்றி நன்கு கலக்கி வேக விடவும்.
ஸ்டாக் அனைத்தும் சுண்டியவுடன் மீதியுள்ள ஸ்டாக்கில் கால்கோப்பையளவில் சிறிது சிறிதாக ஊற்றி அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே வேகவைக்கவும்.
இவ்வாறு அனைத்து ஸ்டாக்கும் இழுக்கப்பட்டவுடன் பேஸில், சீஸ், உப்பு மற்றும் மிளகுத்தூளையும் போட்டு நன்கு கிளறிவிட்டு ஐந்து நிமிடத்திற்கு சிம்மில் வைத்திருந்து இறக்கி விடவும்.