மஷ்ரூம் ராப்ஸ்
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் - 15/20 பெரிய வெங்காயம் - ஒன்று குடை மிளகாய் - ஒன்று தக்காளி - 2 மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி மல்லித்தூள் - 3/4 தேக்கரண்டி சீரகத்தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது வெங்காயத்தாள் - ஒன்று எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சீஸ் ஸ்லைசஸ்/துருவிய சீஸ் டார்ட்டிலா/சப்பாத்தி
செய்முறை:
முதலில் மஷ்ரூமை சுத்தப்படுத்தி
மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து
நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். தக்காளி மற்றும் குடைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பெரிய வாயகன்ற கடாயில்
எண்ணெய் விட்டு சூடாக்கவும். இதில் முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது நிறம் மாறும் போது தக்காளி சேர்த்து
கூடவே சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி கரைந்து வரும் போது நறுக்கி வைத்த மஷ்ரூம் துண்டுகளை போட்டு சில நிமிடங்கள் வதக்கி கூடவே குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
பிறகு மீதி உப்பு
மற்றும் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து வதக்கி விடவும். ஒரு மூடிபோட்டு
அனலை குறைத்து வைத்து வேகவிடவும். தக்காளி
மஷ்ரூமில் கிடைக்கும் தண்ணீரிலேயே காய் முழுவதுமாக வெந்துவிடும். (தனியாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.)
பத்து நிமிடம் கழித்து காய் வெந்துவிட்டதை உறுதி செய்துக் கொண்டு
பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி தழை
வெங்காயத்தாளை தூவிவிட்டு
ஒருமுறை கிளறி இறக்கவும். இப்போது ராப்ஸ் செய்யத் தேவையான ஃபில்லிங் தயார்.
இனி ராப்ஸ் செய்ய தேவையானவைகளை எடுத்து தயாராக வைக்கவும்.
ஒரு டார்ட்டிலாவை/சப்பாத்தியை எடுத்து அதன் நடுவே ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து
அதன் மேலே இரண்டு மேசைக்கரண்டி அளவுக்கு மஷ்ரூம் ஃபில்லிங்கை வைக்கவும்.
படத்தில் காட்டியுள்ளவாறு மடித்து விடவும்.
துருவிய சீஸ் சேர்க்க இதேபோல் ஃபில்லிங்கை வைத்து அதன்மேலே சீஸ் தூவிவிட்டு பின் ரோல் செய்துக் கொள்ளவும்.
குழந்தைகள் கையில் எடுத்து சாப்பிட ஏதுவாக
அலுமினிய ஃபாயில் சுற்றியும் கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்றதாக இருக்கும் இந்த மஷ்ரூம் ராப்ஸ்!(Wraps).