மலேசியா பச்சடி
தேவையான பொருட்கள்:
பழுத்த அன்னாசி பழம் - ஒன்று அல்லது பழ டின் - ஒன்று பழுத்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 4 பரல் சின்ன வெங்காயம் - 10 அல்லது பெரியது - பாதி மஞ்சள் பொடி - சிறிது சீனி - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் - 2 தேக்கரண்டி பட்டை - ஒரு துண்டு கிராம்பு - 2
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அன்னாசி பழத்தை பொடியாக நறுக்கி தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும்.
வெங்காயம்
பச்சை மிளகாய்
பழுத்த மிளகாய்
பூண்டை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை
கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் மிளகாய் ( பச்சை மற்றும் சிவப்பு ) மற்றும் பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு 4 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி உப்பு
மஞ்சள் பொடி
சீனி போட்டு கொதிக்க விடவும்
கொதிக்கும் கலவையுடன் வேக வைத்த அன்னாசிப் பழத்தை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
வித்தியாசமாகவும் அதே சமயத்தில் ருசியாகவும் இருக்கும் இந்த பச்சடி மலாய்காரர்களின் கல்யாணம்
மற்ற விஷேசங்களிலும் பிரியாணியுடன் பரிமாறப்படும்.