மலாய் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப் எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி சர்க்கரை - ஒரு கப் ஏலக்காய் - 4 மலாய் - கால் கப் சர்க்கரை - 2 மேசைக்கரண்டி குங்குமப் பூ - சிறிதளவு ரோஸ் எசன்ஸ் - சிறிதளவு ரோஸ் கலர் - சிறிதளவு (விருப்பப்பட்டால்) பிஸ்தா - அலங்கரிக்க
செய்முறை:
வீட்டிலேயே 2 கப் பாலை கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து திரிய வைத்து பனீர் செய்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். (விளக்கமான செய்முறைக்கு http://arusuvai.com/tamil/node/20198 குறிப்பில் உள்ள 5 ஸ்டெப்பையும் பின்பற்றவும்). சிறு சிறு உருண்டைகளாக உருட்டிய பின்னர் அதை சதுர வடிவமாக தட்டி வைக்கவும். ரொம்பவும் மெல்லியதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கப் சர்க்கரைக்கு மூன்று கப் தண்ணீர் என்ற அளவில் வைத்து சூடு செய்யவும். (நான் இங்கு ஆர்கானிக் சர்க்கரை உபயோகித்திருப்பதால் கலர் அவ்வாறாக உள்ளது).
சர்க்கரை கரைந்ததும் அதில் ஏலக்காய் தட்டி போடவும். இப்பொழுது தட்டி வைத்துள்ள பனீரை மெதுவாக தண்ணீரில் போடவும்.
குக்கரில் என்றால் பனீரை போட்டவுடன் மூடி போடவும். ஸ்டீம் வந்தவுடன் தீயை குறைத்து ஏழு முதல் எட்டு நிமிடம் வேகவிட்டு தீயை அணைக்கவும். பத்து நிமிடம் கழித்து வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். குக்கர் இல்லையென்றால் அடி கனமான பாத்திரத்தில் போட்டு மூடி போட்டு இருபது முதல் இருபத்தி ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேகவிட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். இறக்கிய பின்னர் சிறிதளவு ரோஸ் எசன்ஸ் சேர்த்த பின்னர் வேற பாத்திரத்துக்கு மாற்றவும்.
இது வேகும் போது இரண்டு மடங்காக உப்பும் என்பதால் பாத்திரம் அகலமாக இருத்தல் வேண்டும். ஆறியபின் அதை பிரிட்ஜில் ஆறு முதல் ஏழு மணி நேரம் குளிர விடவும்.
கோவாவை பிசைந்துக் கொண்டு அதில் சர்க்கரை
கலர் மற்றும் சிறிதளவு குங்கும பூவை பாலில் கலந்து விடவும். பால் அதிகம் சேர்த்தால் கோவா நீர்த்து போகும். அதனால் பார்த்து சேர்க்கவும்.
ஊறிய ரசகுல்லாவை (ஸ்டெப் ஐந்து வரையில் செய்து முடித்த ப்ராடெக்ட் தான் ரசகுல்லா :)) எடுத்து சிறிதளவு பிழிந்து குறுக்கே பாதி தூரம் கட் பண்ணவும். நடுவே இந்த கோவா கலவை வைத்து மூடவும். முழுவதும் கட் செய்ய கூடாது. பிஸ்தா நறுக்கிப் போட்டு குளிர வைத்தோ அல்லது அப்படியே கூட பரிமாறலாம். சுவையான மலாய் சாண்ட்விச் ரெடி.