மலாய் கோஃப்தா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோஃப்தாவிற்கு:-

---------------------

பனீர் - 100 கிராம்,

உருளைக்கிழங்கு - 2,

கார்ன் ஃப்ளார் மாவு - 1/4 கப்,

பச்சை மிளகாய் - 2,

உலர் திராட்சை - 10 கிராம்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - பொரிக்க.

க்ரேவிக்கு:-

--------------

பெரிய வெங்காயம் - 2,

தக்காளி - 3,

பச்சை மிளகாய் - 1,

இஞ்சி - ஓர் அங்குல துண்டு,

பூண்டு - 10 பல்,

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,

தனியா தூள் - 1 தேக்கரண்டி,

கரம் மசாலா - 1 தேக்கரண்டி,

ஃப்ரஷ் க்ரீம் - 100 மில்லி,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,

சர்க்கரை இல்லாத கோவா - 100 கிராம்.

செய்முறை:

கோஃப்தா செய்யும் முறை:-

----------------------------------

ஊருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து நன்கு மசித்து வைக்கவும்.

பனீரை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

பனீர், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சம உருண்டைகளாக்கவும்.

ஒவ்வெரு உருண்டையின் உள்ளும் ஒரு உலர்ந்த திராட்சையை வைத்து மூடி, கொஞ்சம் நீளவாக்கில் வருவது போல் உருட்டவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, உருண்டைகளை எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

கிரேவி செய்யும் முறை:-

--------------------------------

வெங்காயத்தை கொதிக்கும் நீரில் போட்டு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். நீரை வடித்து அரைத்து வைக்கவும்.

தக்காளியை அரைத்து வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் செர்த்து நைசாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது, மிளாகய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

பொடி வாசனை போனதும் தக்காளி விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

ஐந்து நிமிடம் கொதித்ததும் கோவாவை 1/2 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

அடுப்பை குறைவாக வைத்து கொதிக்க வைக்க விடவும். ஐந்து நிமிடம் கழித்து க்ரீம் சேர்த்து இறக்கவும்.

கோஃப்தாக்களை பரிமாறும் பாத்திரத்தில் அடுக்கி, மேலாக கிரேவியை ஊற்றவும்.

கிரேவியை ஊற்றியதும் பரிமாற வேண்டும்.

ஹோட்டலில் சாப்பிடும் மலாய் கோஃப்தா ருசியிலேயே இருக்கும்.

குறிப்புகள்:

நாண், ரொட்டி, புல்காவுடன் பரிமாறலாம்.