மரவள்ளிக்கிழங்கு வறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு - 400 கிராம் தேங்காய்பூ - 3 மேசைக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி செத்தல் மிளகாய் - 4 வெங்காயம் - 15 - 20 கிராம் கடுகு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு - 1 1/4 தேக்கரண்டி

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை தயாரான நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மரவள்ளிக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி

மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு வேக வைத்து எடுக்கவும். (கரையுமளவிற்கு வேக விட வேண்டாம்).

வேக வைத்த கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடித்தெடுத்து

நார் இல்லாமல் தூளாக உதிர்த்துக் கொள்ளவும்.

உதிர்த்து வைத்திருக்கும் கிழங்குடன் மஞ்சள் தூள்

தேங்காய்பூ

மீதமுள்ள உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.

வெங்காயம் மற்றும் மிளகாயை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்

மிளகாயை போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை

கடுகு சேர்த்து வதக்கவும்.

அதில் பிரட்டி வைத்திருக்கும் மரவள்ளிகிழங்கை போட்டு கிளறி விடவும்.

வதக்கியவற்றுடன் சேர்ந்து கிழங்கு நன்கு சூடாகியதும் இறக்கி வைத்து விடவும்.

சுவையான மரவள்ளிக்கிழங்கு வறை ரெடி. அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்

குறிப்புகள்: