மரவள்ளிக்கிழங்கு மஞ்சூரியன் (2)
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1 (1 அடி அளவானது)
கறித்தூள்/மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி பேஸ்ட் - 5 மேசைக்கரண்டி
மிளகாய் ஸோஸ்/ஹாட் ஸோஸ்/மிளகாய் பேஸ்ட் - 2 - 3 மேசைக்கரண்டி
புளிக்கரைசல் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கறுவா(பட்டை) - சிறிய துண்டு
கராம்பு (கிராம்பு)- 3
வெட்டிய கொத்தமல்லி இலை - 3 மேசைக்கரண்டி
உள்ளி பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை 1 - 2 அங்குல குற்றிகளாக வெட்டி சுத்தப்படுத்தி கறித்தூள்/மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும்.
எண்ணெயை சூடாக்கி அதில் மரவள்ளித்துண்டுகளைப்போட்டு பொரித்து(Deep Fry) வடித்து எண்ணெய் ஒற்ற ஒரு பேப்பரில் போடவும்.
சீரகம்,கறுவா, கிராம்பை பொடித்து வைக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் ஒலிவ் எண்ணெயை சூடாக்கி உள்ளி பேஸ்ட், தக்காளி பேஸ்ட் போட்டு வதக்கவும்.
பின்னர் புளிக்கரைசல், 1/4 கப் தண்ணீர், மிளகாய் ஸோஸ்/ஹாட் ஸோஸ்/மிளகாய் பேஸ்ட் , சீரகம்-கறுவா-கிராம்பு பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.
கலவை கொதித்து தடிப்பானதும் அதனுள் பொரித்த மரவள்ளித்துண்டுகளைப் போட்டு கிளறி இறக்கவும்.
சுவையான மரவள்ளி மஞ்சூரியன் தயார். கொத்தமல்லி இலைதூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
மரவள்ளிக்கிழங்கை பொரிக்க விரும்பாதவர்கள் அவித்து சிறிது ஒலிவ் எண்ணெய் அல்லது மரக்கறி எண்ணெயில் சோட்டே (Saute) செய்தும் போடலாம். தேவையான உறைப்புக்கு ஏற்ப மிளகாய் ஸோஸ்/ஹாட் ஸோஸ்/மிளகாய் பேஸ்ட்டை கூட்டி குறைக்கலாம்.