மரவள்ளிக்கிழங்கு மஞ்சூரியன் (1)
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1 (1 அடி அளவானது)
கறித்தூள்/மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி கெட்ச்சப் - 1 கப்
மிளகாய் ஸோஸ்/ஹாட் ஸோஸ் - 3 மேசைக்கரண்டி
சோயா ஸோஸ் - 1 தேக்கரண்டி
புளிக்கரைசல் - 2 மேசைக்கரண்டி
வெட்டிய கொத்தமல்லி இலை - 3 மேசைக்கரண்டி
உள்ளி பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை 1 - 2 அங்குல குற்றிகளாக வெட்டி சுத்தப்படுத்தி கறித்தூள்/மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும்.
எண்ணெயை சூடாக்கி அதில் மரவள்ளித்துண்டுகளைப்போட்டு பொரித்து(Deep Fry) வடித்து எண்ணெய் ஒற்ற ஒரு பேப்பரில் போடவும்.
வேறொரு பாத்திரத்தில் ஒலிவ் எண்ணெயை சூடாக்கி உள்ளி பேஸ்ட் போட்டு வதக்கவும்.
பின்னர் அதனுள் தக்காளி கெட்ச்சப், மிளகாய் ஸோஸ்/ஹாட் ஸோஸ், சோயா ஸோஸ், புளிக்கரைசல், 1/4 கப் தண்ணீர் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கலவை கொதித்து தடிப்பானதும் அதனுள் பொரித்த மரவள்ளித்துண்டுகளைப் போட்டு கிளறி இறக்கவும்.
சுவையான மரவள்ளி மஞ்சூரியன் தயார். கொத்தமல்லி இலைதூவி பரிமாறவும்.