மரவள்ளிக்கிழங்கு பிரட்டல்
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1 (1 அடி அளவானது)
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
வெட்டிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி
உள்ளி - பேஸ்ட் - 1 தேக்கரண்டி
பெரிய சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் - பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
தக்காளி பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 நெட்டு
கொத்தமல்லி இலை - 4 நெட்டு
உப்பு
ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை 1 அங்குல குற்றிகளாக வெட்டி சுத்தப்படுத்தி மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அவிக்கவும்.
கிழங்கு அரைவாசி வெந்ததும் உப்பு போட்டு மீண்டும் அவிக்கவும்.
கிழங்கு நன்றாக அவிந்ததும் வடித்து எடுக்கவும் - கரைய விட வேண்டாம்.
ஒரு பாத்திரத்தில் ஒலிவ் எண்ணெய் விட்டு சூடானதும் மஞ்சள்தூள், வெங்காயம், உள்ளி பேஸ்ட், பெரிய சீரகம், கடுகு, மிளகாய் பிளேக்ஸ், தக்காளி பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் அதனுள் உப்பு, அவித்த மரவள்ளிக்கிழங்கை போட்டு கிளறவும்.
சுவையான மரவள்ளிப் பிரட்டல் தயார். இதனை சுடு சோறுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.